சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதவராக, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 6நாள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான […]
