ஆரணிக்கு அருகில் அரசு பேருந்தில் குழந்தைகளுடன் ஒரு பெண் இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்ற பெண் தன்னுடைய குழந்தைகளுடன் ஆரணியில் இருந்து அரசு பேருந்தில் பயணித்து இருக்கிறார். அப்பொழுது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மேல் புதுப்பாக்கம் பகுதியில் இறங்கிவிட்டனர்.
எனவே பேருந்து நடத்தினர் ஜெயப்பிரியாவை அங்கேயே இறங்குமாறு வற்புறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவரை பாதி வழியிலேயே இறக்கி விட்டு விட்டு இறங்கி செல்ல கூறியுள்ளார். எனவே அதிர்ச்சி அடைந்த வாழைப்பந்தல் கிராம மக்கள் அந்த பேருந்து மீண்டும் ஊருக்குள் வந்தபோது சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.