போர் எப்போது முடிவுக்கு வரும்… முக்கிய தலைவரின் கருத்தால் கடும் அதிருப்தியில் புடின்


உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் திட்டங்கள் வெற்றிபெற இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் என வாக்னர் தலைவர் கூறியுள்ளது ஜனாதிபதி புடினை கொதிப்படைய வைத்துள்ளது.

முழுமையாகக் கைப்பற்ற இரண்டு ஆண்டுகள்

ரஷ்ய ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான வாக்னர் கூலிப்படையின் தலைவரான Yevgeny Prigozhin தெரிவிக்கையில்,
உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்றார்.

போர் எப்போது முடிவுக்கு வரும்... முக்கிய தலைவரின் கருத்தால் கடும் அதிருப்தியில் புடின் | Take Years To Achieve Russia Goals

@getty

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே குறித்த கருத்தை பதிவு செய்வதாகவும் Yevgeny Prigozhin தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் வாரத்தில் ரஷ்யா எதிர்கொண்ட மோசமான இழப்பை விடவும் தற்போது பேரிடியை எதிர்கொண்டு வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ள நிலையிலேயே, ரஷ்யாவுக்கு இனி இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என வாக்னர் கூலிப்படை தலைவர் Yevgeny Prigozhin தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ரஷ்யா அடிமேல் அடிவைத்து, வெற்றி பெற்று வருவதாகவே ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
இதனிடையே, போரில் ஒரு ஆயுதமாக ரஷ்யா பலாத்காரத்தை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறார்களுடன்

மேலும், இந்த ஓராண்டில் மட்டும் 65,000 போர் குற்றங்களை ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் முன்னெடுத்துள்ளதாகவும் பட்டியிலப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறார்களுடன் ஆண்களும் துன்புறுத்தல்களை இலக்காகியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போர் எப்போது முடிவுக்கு வரும்... முக்கிய தலைவரின் கருத்தால் கடும் அதிருப்தியில் புடின் | Take Years To Achieve Russia Goals

@getty

இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உக்ரைன் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ரஷ்யா மீது வெற்றிகொண்ட பின்னர் நேட்டோ உறுப்பு நாடாக இணையவும் உக்ரைன் முடிவு செய்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.