வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகத்திற்கு வருகிறார். அதன் படி அவர், 18-ந் தேதி காலை நாட்டின் தலைநகர் புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.

அதன் பின்னர் அவர் கார் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து அவர் விமானத்தின் மூலம் மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்குச் செல்கிறார்.
அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈஷா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்க்க உள்ளார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் முர்மு வருகையை முன்னிட்டு ,மதுரையில் வருகிற பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18-ல் வானத்தில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.