வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிபிசி நிறுவனம் வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, இந்த நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை எனக்கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை 3 நாட்களாக நீடித்தது. சர்வதேச வரி முறைகேடு மற்றும் துணை நிறுவனங்களுக்குள் நிதி மாற்றத்தில் நடந்துள்ள புகார் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 நாட்களாக நடந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. ‘பி.பி.சி.,’ பெயரை குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் இந்த நிறுவனம் பல மொழிகளில் செய்திகளை ஒளிபரப்புகிறது. அதற்கான வருமானத்தை கணக்குகளில் காட்டப்படவில்லை. இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பட்டுள்ள தொகைகளுக்கு கணக்கு காட்டவில்லை. பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
டிவி, ரேடியோ, டிஜிட்டல் என பல்வேறு மொழிகளில் அளிக்கப்படும் சேவையில் வருவாய் கணக்கிடுவதில் விதிமீறல் உள்ளது. பிபிசி அளித்த அறிக்கையில் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி ஒளிபரப்புகளில் வருவாய் ஒத்து போகவில்லை. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement