அதானி மற்றும் பிபிசி விவகாரம்; பீகார் முதல்வரின் நச் கருத்து.!

தொழிலதிபர் அதானியின் நிதி முறைகேடுகள் குறித்து, அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன் விளைவாக உலகின் 3வது பணக்காரராக இருந்த அதானி, தற்போது 20 இடத்திற்கும் கீழாக வந்துவிட்டார். குறைந்த கால இடைவெளியில், பிரதமர் மோடியின் அதானியின் சொத்து மதிப்பு அபரிமிதமாக உயர்ந்ததை ஏற்கனவே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில் ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை உண்மையை வெளிச்சம்போட்டு காட்டியதால், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போராடிய நிலையில், அதற்கு ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. அதேபோல் கடந்த 2002ம் ஆண்டில் ஏற்பட்ட குஜராத் கலவரமானது அப்போதைய முதல்வர் மோடி உதவியால் நடைபெற்றது எனவும், மேலும் கலவரத்திற்கு நேரடி காரணம் மோடி என்றும் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை, ஒன்றிய பாஜக அரசு கடுமையாக எதிர்த்து அதை சமூகவலைதளங்களில் தடையும் செய்தது. அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஐடி ரெய்டும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களும் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘ டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசியின் அலுவலகங்களில் ரெய்டு நடைபெறுவது நமக்கு ஒரு உண்மையை கூறுகிறது. விமர்சனங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கை இது.

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது கொடூரம். வாஜ்பாய் காலத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் பொறுமையாக கேட்கப்பட்டது. ஆனால் இப்போது நரேந்திர மோடியின் தலைமையிலான அதே பாஜக ஆட்சியில் எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. குறைந்த பட்சம் எதிர்ப்பைக் கேட்கும் கண்ணியம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.

இவ்வளவு நாட்களாக எனது பீகாரில் நடைபெறும் சமாதான யாத்திரையில் நான் பிஸியாக இருந்தேன். ஆனால் அதைப் பற்றி (ஐடி ரெய்டுகள்) செய்தித்தாள்களில் ஒன்றைப் படித்தேன். அதைப் பற்றி இன்னும் விரிவாக அறிய முயற்சிப்பேன்.

‘சித்தராமையாவை கொல்ல வேண்டும்..?’ – கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை.!

பிபிசி மிகவும் பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் இவ்வளவு காலமாக எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நடவடிக்கை (ஐடி ரெய்டுகள்) அவர்களின் வேலையின் விளைவாக இருந்தால், இந்த ஆளும் ஆட்சி துண்டிக்கப்படலாம் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். எந்த விமர்சனமும் இல்லை. எந்தவொரு பாதகமான ஊடக கவரேஜிலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. எனது வேலையைச் செய்வதில் நான் நம்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை, மக்கள்தான் உயர்ந்தவர்கள்’’ என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.