புலந்த்ஷஹர்: உத்தர பிரதேசத்தில், தகவல் தருவோருக்கு 1.25 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளி, ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாப் சிங் என்பவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பல நாட்களாக தலைமறைவாக இருந்ததால், இவரை கண்டுபிடித்து தருபவருக்கு 1.25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள குலாவதி பகுதியில், சஹாபின் நடமாட்டம் இருப்பதை அறிந்த அதிரடிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரை சுற்றிவளைத்தனர். அப்போது, தப்ப முயன்ற சஹாப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மார்பு மற்றும் கால்களில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சஹாப் நேற்று உயிரிழந்தார்.
கடந்த 2001ல், கோண்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து சஹாப், அவரது கூட்டாளிகள் கொள்ளையடிக்க முயன்றபோது, அங்கிருந்தவர்களை கொடூரமாக தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement