Pathaan: கம்பேக்னா இப்படி இருக்கணும்: வாய் பிளக்க வைக்கும் 'பதான்' பட வசூல்.!

‘பதான்’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் ஷாருக்கான். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது நடிப்பில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், பலவித சர்ச்சைகளையும் கிளப்பியது. மேலும் வெளியீட்டுக்கு முன்பே இந்தப்படத்திற்கு மிரட்டல் எல்லாம் விடப்பட்டது. இந்நிலையில் ஷாருக்கானின் ‘பதான்’ படம் உலகளவில் செய்துள்ள வசூல் பாலிவுட் தரப்பினரையே வாய் பிளக்க வைத்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பதான்’ படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீப காலமாக வெளியான பாலிவுட் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது. இந்த பார்மூலாவை தவிடுபொடியாக்கும் விதமாக மலைக்க வைக்கும் வசூல் சாதனை படைத்து வருகிறது ‘பதான்’.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான். இந்தப்படத்தில் ரா ஏஜெண்ட் உளவாளியாக ஷாருக்கான் நடித்திருந்தார். மேலும் யாரும் எதிர்பார்க்காத விதமாக சல்மான் கான் ‘பதான்’ படத்தில் கேமியோ ரோலில் தோன்றி அனைவருக்கும் இன்பதிர்ச்சி அளித்தார்.

‘பதான்’ படம் வெளியாவதற்கு முன்பாக பாடல் ஒன்று வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. இந்தப்பாடலில் தீபிகா படுகோனே காவி நிறத்திலான உடை அணிந்திருப்பதாகவும், ஷாருக்கான பச்சை கலர் சட்டை அணிந்திருப்பதாகவும் கூறி பலவித சர்ச்சைகளை எழுந்தது. இதனால் படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

Dhanush: மீண்டும் பார்முக்கு வரும் தனுஷ்: அடுத்த அதிரடி ஆரம்பம்.!

ஆனால் முதல் நாளிலே உலகளவில் ரூ.106 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து 4 நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் வெளியான ‘பதான்’ படமானது இதுவரையில் மொத்தமாக உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகி பிரம்மாண்ட சாதனை புரிந்துள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anushka:நம்ம அனுஷ்காவா இது.?: லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யின் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படங்களை இயக்கிய அட்லீ ‘ஜவான்’ படத்தின் மூலம் தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் ‘பதான்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.