கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்திய 85 தாக்குதல்களை உக்ரைனிய படைகள் முறியடித்துள்ளனர்.
85 மேற்பட்ட பகுதிகளில் தாக்குதல்
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதியில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த முன்னேற்றங்களுக்காக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்ய படைகள் முன்னெடுத்துள்ளன என உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Gleb Garanich—Reuters
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்ஸ்க், அவ்திவ்ஸ்க் மற்றும் ஷக்தர்ஸ்க் பகுதிகள் மற்றும் குப்யான்ஸ்க் மற்றும் லைமான்ஸ்க் ஆகிய வடகிழக்கு பகுதிகள் மீது இந்த தாக்குதல்கள் குவிந்துள்ளன.
போராடும் உக்ரைனிய படைகள்
ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலில் டஜன் கணக்கான ராக்கெட் வீச்சுகள் நடந்ததாகவும், அதில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் டெலிகிராமில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
இதற்கிடையில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 85ம் மேற்பட்டவற்றை உக்ரைனிய துருப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முறியடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
