பெங்களூரு: லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்ஏ.வை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, போலீசார் குண்டுகட்டாக தூக்சிச்சென்று கைது செய்தனர். கர்நாடகாவின் சென்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் கர்நாடகாவின் மைசூர் சோப் நிறுவனத்தின் வாரியத் தலைவராக இருக்கிறார். இவர் கர்நாடகாவில் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் துறைக்கு ரசாயனப் பொருட்களை வாங்குவதற்கு பல கோடி ரூபாய்க்கு அண்மையில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. […]
