வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: ராணுவத்தை பலப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு ,இந்தியாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிமாக நிதி ஒதுக்கி உள்ளது சீனா.
![]() |
சீனாவில் உள்ள ராணுவம் மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 2 மில்லியன் வீரர்கள் வரை உள்ளனர். உலகின் வலிமை மிக்க ராணுவமாக மாற்றவும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியான இரண்டாவது இடத்தை பிடிக்கும் வகையில் அதிபர் ஜிஜின்பிங் செயல்படுத்தி வருகிறார். வரும் 2027 ம் ஆண்டு சீன ராணுவத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி தொடர்பாளர் வாங்சாவோ கூறுகையில் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது, மாறாக பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலக அமைதியைப் பாதுகாக்கும் நேர்மறையான சக்தியாக இருக்கும் .தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் அதிகரிப்பு தேவை என கூறி உள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில் 2023-24 ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்காக ரூ.5.94 லட்சம் கோடி அதாவது: 72.6 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு நிதி ஓதுக்கி உள்ளது. அதே நேரத்தில் சீனா தற்போது 1.55 டிரில்லியன் யுவான் அதாவது225 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கி உள்ளது.
![]() |
2023ம் ஆண்டில் அமெரிக்கா தனது ராணுவத்திற்காக சுமார் 816 பில்லியன் டாலர் ஒதுக்கி உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ராணுவத்திற்காக அதிக நிதி ஓதுக்கீடு செய்யும் இரண்டாவது நாடாக சீனா விளங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement