சென்னை: மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும், ’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. நவின டிஜிட்டல் உலகம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு டிஜிட்டல் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அதுபோல டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, பூக்கும் வியாபாரி உள்பட அனைத்து தரப்பினரும் இணையதள பண பரிவர்த்தனையேயே விரும்புகின்றனர். […]
