ஒன்றரை ஆண்டுகள்… காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர்


ஈரானில் மாயமாகியுள்ள தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் தந்தை கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்

ஈரானுக்கு சென்ற அவரது மகள் ஒன்றரை ஆண்டுகளாக நாடு திரும்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகள்... காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர் | Missing In Iran Canada Family Think Detained

@Global News

35 வயதான Behnoush மற்றும் அவரது துணை Mathew Safari ஆகியோர் தெஹ்ரான் சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர்.
2021 நவம்பர் மாதம் அந்த தம்பதி கனடாவில் இருந்து பாரசீக வளைகுடா தீவான கிஷ் செல்ல திட்டமிட்டனர்.

நவம்பர் 6ம் திகதி அவர்கள் தெஹ்ரான் சென்றடைந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை எனவும் அந்த தந்தை கூறுகிறார்.
இதற்கு முன்னரும் Behnoush பலமுறை ஈரான் சென்றுள்ளார், குடும்பத்தினரை சந்தித்துள்ளார், ஆனால் எந்த சிக்கலும் இருந்ததில்லை என்கிறார் அவரது தந்தை.

Behnoush கைதானதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அங்கிருந்து வந்துள்ள தகவலில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக தந்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பு கொண்டவரும் அல்ல

Behnoush கனேடிய ஈரானியர், வான்கூவரில் தான் வசித்து வந்தார். அரசியல் சார்பு கொண்டவரும் அல்ல என்கிறது அவரது குடும்பம்.
2013ல் அவர் கனடாவுக்கு குடியேறிய பின்னர் வான்கூவரில் பணியாற்றி வருகிறார்.

ஒன்றரை ஆண்டுகள்... காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர் | Missing In Iran Canada Family Think Detained

@Global News

இவரது துணையான Mathew Safari என்பவரும் கனேடிய ஈரானியர் தான்.
கிஷ் தீவில் இவர் குடியிருப்பு ஒன்றை வாங்கியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் குடியிருப்பை விற்றதாக கூறப்படும் அந்த நிறுவனம் அப்படியான ஒரு விற்பனையும் நடக்கவில்லை என கூறியுள்ளது.

Safari குறித்து Behnoush குடும்பத்திற்கு போதிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தமது மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என Behnoush-ன் தந்தை அரசாங்கத்தை நாடியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.