இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பரிந்துரைக்கு ஆதரவு| Support nomination of US Ambassador to India

வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, எரிக் கார்செட்டியை நியமிக்க, 52, அமெரிக்க செனட் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான ஓட்டுப் பதிவு நடந்தது. அப்போது, கார்செட்டியின் நியமனத்துக்கு ஆதரவாக, 138 ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து, அடுத்த கட்டமாக செனட் சபையின் முழு ஓட்டெடுப்புக்கு எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்புதல் கிடைத்தால், இந்திய துாதராக அவர் நியமிக்கப்படுவார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி, 52, அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றவர். ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர், மேயர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.