தனுஷுக்கு நன்றி தெரிவித்த பொன்னம்பலம்

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலக்குறைபாடு காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஒரு தனியார் சேனலுக்கு பொன்னம்பலம் அளித்த பேட்டியில் “தம்பி தனுஷுக்கு நான் போனில் பேசி கொண்டிருக்கும் போதே என் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். இந்த அளவிற்கு அவர் உதவி செய்வார் என நான் நினைக்கவில்லை. நான் நினைத்தது விட பத்து மடங்கு அதிகமாக எனக்கு உதவி செய்துள்ளார். கடத்த மூன்று வருடத்தில் நான் கஷ்டபடாத அளவிற்கு தனுஷ் உதவியுள்ளார்” என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.