”நீங்க பண்ணதெல்லாம் போதும்; இனி நான் பாத்துக்கிறேன்”- ஃபேன்ஸ் முன் உணர்ச்சிவசப்பட்ட சிம்பு

கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. இதில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெற்ற நம்ம சத்தம் மற்றும் நினைவிருக்கா ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பத்து தல படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியிடும் விழா நடைபெற்றது. இதில் சிம்புவின் தந்தை டி.ஆர், ஆரி, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றனர்.

Image

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிகுந்த நம்பிக்கையோடும், துள்ளலோடும் நடிகர் சிம்பு பேசியிருந்ததுதான் சமூக வலைதளங்கள் முழுவதிலும் டாப் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ரசிகர்களை நோக்கி, “எனக்காக எவ்ளோ பண்ணிருக்கீங்க. எனக்காக எவ்ளோ ஆதரவா இருந்திருக்கீங்கனு எல்லாமே தெரியும். ஆனா இனிமேல் நீங்கள் சந்தோஷமா இருங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன். நான் கஷ்டத்துல இருந்தப்போ எனக்காக நீங்க பண்ணதெல்லாம் போதும்.

இனிமே நான் என்ன பன்றேனு மட்டும் சும்மா ஜாலியா சேர் போட்டு கூல எஞ்சாய் பண்ணி பாருங்க. ஏன்னா வந்துட்ட. சாதாரணமா இல்ல, வேற மாதிரி வந்துட்ட. உங்கள இனிமேல் தலைகுனிய விடவே மாட்ட. அது நடக்காது. சோகமான சீன்லாம் முடிஞ்சுது. இனி எல்லாம் சந்தோஷமான சீன்தான். இந்த படம் ஆரம்பிக்கும் போது ரொம்ப கீழ இருந்தேன். சினிமாவை விட்டே போய்டலாம்னு நினைச்சேன். ஆனால் இந்த படத்துல நடிக்க காரணமே கவுதம்தான். கவுதம் நடிகன் மட்டுமல்ல. தங்கமானவர். இந்த படம் எனக்காக இல்லைனாலும் கவுதம்காக வெற்றியடையனும்னு வேண்டிக்கிறேன்.

இந்த படத்திலும் துணை கிடையாது. வாழ்க்கையிலும் துணை கிடையாது. அது பிரச்சினை இல்லை. தம் படத்துக்கு பிறகு கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டி இருந்தது. அப்போ நடிச்சிருந்தா ஒரு தலைதான் வந்திருக்கும். ஆனால் இப்போது பத்து தல கிடைச்சுருக்கு. எனது காட்ஃபாதர் ரஹ்மான் சார்தான். அவரது பெயரை நான் கெடுத்திட மாட்டேன்னு நம்புறேன். என் ஆன்மிக குருவாகவும் அவர்தான் இருக்கிறார். தமிழ் மக்களுக்கும் சொல்றேன். தமிழ் சினிமா பெருமையடையும் அளவுக்கு இனி கண்டிப்பா நான் நடந்துப்பேன்.” என சிம்பு பேசியது அரங்கையே அதிர வைத்திருந்தது. இதுபோக, மேடையில் லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஆரவாரம் செய்யவும் செய்தார் நடிகர் சிம்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.