சென்னை : கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகியாக கோலிவுட்டை கலக்கினார்
முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், கடாவர் படங்களில் நடித்த அதுல்யா இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்
நடிகை அதுல்யா ரவிக்கு படவாய்ப்பு இல்லாததால் படவாய்பை பெற இணையமே கதி என கிடக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார்.
நடிகை அதுல்யா ரவி
காதல் கண்கட்டுதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதுல்யா ரவிக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. காதல் கண்கட்டுதே படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், படம் சில காட்சிகள் இளசுகளுக்கு பிடித்துவிட்டதால் அதுல்யா ரவி இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக மாறினார்.

கவர்ச்சியில் அதகளம்
ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்த அதுல்யா ரவி அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகளில் நடித்து கவர்ச்சியை. தெறிக்க விட்டிருந்தார். இதைப்பார்த்த பலரும் மிரண்டு போனார்கள்.

ஒரு சில படங்களில்
இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை என்றாலும் குறைவான படங்களில் நிறைவான கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ் உடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.அதன் பின் வட்டம், அமலா பால் தயாரித்த கடாவர் படத்திலும் நடித்தில் இரண்டாம் கதாநாயகியாக சில காட்சிகளில் மட்டுமே வந்து போனார்.

அந்த வசீகரம் இல்லை
இனிமேலும் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்தால் பட வாய்ப்புக்கள் வராது என்பதை நன்கு அறிந்து கொண்ட அதுல்யா ரவி கவர்ச்சிக்கும் பச்சை கொடி காட்டி நடித்து வருகிறார். அப்போது ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வரும் அதுல்யா, தற்போது ஸ்லீவ்லஸ் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்தாலும். அதுல்யாவிடம் முன்பு இருந்த அந்த வசீகரம் இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.