சென்னை: Vignesh Shivan N (விக்னேஷ் சிவன்) நயன்தாரா உலகின் சிறந்த தாய் என பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவனை ரசிகர்களில் ஒரு தரப்பினர் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என கணித்தனர்.
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா
ஐயா படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது. அதன்படி அவர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஹீரோயின் ஆனார். துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தினார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் நயன்தாரா.

முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா
சந்திரமுகி படத்துக்கு பிறகு விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் நயன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். எனவே அடுத்த சில வருடங்களுக்கு நயனின் ஆட்சிதான் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடைபெற போகிறது என பலர் ஆரூடம் கூறினர். அவர்களின் ஆரூடம் பலிக்கும்படிதான் நயனின் க்ராஃபும் இருந்தது.

பிரச்னைகளை சந்தித்த நயன்தாரா
சூழல் நல்லபடியாக போய்க்கொண்டிருக்க சில தனிப்பட்ட பிரச்னைகளை சந்தித்தார் நயன்தாரா. அதனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் சில காலத்திலேயே அவர் மீண்டும் நடிக்க முடிவெடுத்து ரீ என்ட்ரி கொடுத்தார். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனையடுத்து அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்
தனிப்பட்ட முறையில் பிரச்னைகளை சந்தித்த நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது உருவான இவர்களது காதல் கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த பின் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழ்ந்தைகளை பெற்றுக்கொண்டனர். ஆனால் விதிகளை அவர்கள் மீறிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு நடந்த விசாரணையில் வாடகைத் தாய் விவகாரத்தில் இவர்கள் விதிகளை மீறவில்லை என்பது உறுதியானது. அதுமட்டுமின்றி 2016ஆம் ஆண்டே அவர்கள் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிகிறது.

குழந்தைகளுக்கான பெயர்கள்
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது குழந்தைகளின் பெயர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் மற்றும் உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் இருக்கும் N என்பது உலகின் சிறந்த தாய் நயன்தாராவை குறிக்கும் என விக்னேஷ் சிவன் விளக்கமளித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
இரண்டு குழந்தைகளின் பெயருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும்; சிலர் விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது இந்த உலகத்தில் ஐந்தறிவு ஜீவனும் தனது குட்டிகளுக்கு சிறந்த தாய்தான், ஆறறிவு உள்ள மனித இனத்திலும் பிள்ளைகளை பெற்றவர்கள் சிறந்த தாய்தான். இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவன் சொல்வதைப் பார்த்தால் இந்த உலகத்திலேயே நயன்தாரா மட்டும்தான் சிறந்த தாயா என்ற கேள்வி எழுவதாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதேசமயம், விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது இருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடால்தான் இப்படி கூறியிருக்கிறார். இதில் ட்ரோல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்றும் நயன் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.