சென்னை: கோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, தற்போது நாயகியாக நடித்து வருகிறார்.
விருமன் படத்தில் கார்த்தியின் ஜோடியாக அறிமுகமான அதிதி ஷங்கர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாகிவிட்டார்.
விருமனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அதிதி ஷங்கரின் மூன்றாவது திரைப்படம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இளம் ஹீரோவுடன் அதிதி ஷங்கர்: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். அவரது மகளான அதிதி ஷங்கரும் தற்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார். கடந்தாண்டு வெளியான விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே தனது குறுகுறு பார்வையால் ரசிகர்களை கட்டிப் போட்ட அதிதி ஷங்கர், கோலிவுட்டின் டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்தார். அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்திலும் நாயகியாக கமிட் ஆனார். இந்தப் படம் இந்தாண்டு ஜூன் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அதிதி ஷங்கர் தனது 3வது படத்தில் சிம்புவுடன் ஜோடியாக வேண்டும் என அதிக ஆர்வம் காட்டினார். வெந்து தணிந்தது காடு ரிலீஸான பின்னர் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார் அதிதி. இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதே அதிதியின் மிகப் பெரிய லட்சியம். ஆனால், இயக்குநர் ஷங்கரோ சிம்பு ஜோடியாக நடிக்க வேண்டாம் என மறுத்து வந்தார்.
ஆனால், கொரோனா குமார் படம் ஷூட்டிங் போகும் முன்பே டிராப் ஆனது. இதனால் அடுத்த என்ன படம் என எதிர்பார்ப்பில் இருந்த அதிதி ஷங்கருக்கு சூப்பரான வெற்றிக் கூட்டணியில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். முண்டாசுப்பட்டி, ராட்சசன் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம்குமார். இந்த இரண்டு படங்களிலுமே விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்தில் இணைகிறார்களாம். அதில், அதிதி ஷங்கர் தான் நாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷ்ணு விஷால் – ராம்குமார் இணையும் 3வது படம், அதிதி ஷங்கருக்கும் 3வது படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அதிதி ஒரு படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷ்ணு விஷால் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ள படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் போன வருத்தத்தில் இருந்த அதிதி ஷங்கர், வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம்.