வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நாடு கடத்தும் விவகாரம் தொடர்பாக மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி தஹவூர் ராணாவின் மனுவை அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளான டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
![]() |
இதில் தஹவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வருவது தொடர்பாக வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்பேரில், அரசு தரப்பும், குற்றவாளி தரப்பும் வழக்கு விவரங்களை தெரிவித்து, தற்போதைய நிலையை விவாதிப்பது தொடர்பான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தஹவூர் ராணா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு 30 நாளில் வந்து விடும் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement