எனக்கு அப்பாவா நடிச்சவரே என்கிட்ட தப்பா பேசிறாரு.. பிரபலம் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

சென்னை : சினிமாவில் எனக்கு அப்பாவா நடிச்சவரே என்கிட்ட தப்பா பேசினார் என்று நடிகை குட்டி பத்மினி அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான குட்டி பத்மினி, குழந்தையும் தெய்வமும் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரமாவார்.

ஏராளமான படங்களில் நடித்துள்ள குட்டி பத்மினி தயாரிப்பாளராக பல தொலைக்க்காட்சி தொடர்களை தயாரித்துள்ளார்.

நடிக்க பிடிக்கவில்லை : இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அதில், திருமணத்திற்கு முன்பே நடிப்பதில் இருந்து விலகி விட்டேன், இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நான் ஹீரோயினாக நடித்து இருந்தேன். எனக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடுவது, கவர்ச்சி உடை அணிவது எனக்கு பிடிக்கவில்லை என்பதால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று என் அம்மாவிடம் சொன்னேன், என் அம்மாவும் என் நிலைமை புரிந்து கொண்டு உன் விருப்பம் என்றார்.

தவறாக பேசினார் : இதனால், நான் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன், ஆனால் திருமணத்திற்கு பின் எனக்கும் என் கணவருக்கும் சண்டை, என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க எனக்கு பணம் தேவைப்பட்டதால் மீண்டும் நடிக்க வந்தேன். அப்போது பெங்களுரில் ஒரு படப்பிடிப்புக்கு சென்றேன் அப்போது ஒரு இயக்குநர் என்னிடம் தவறாக பேசினார். இதனால், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது அங்கு இருந்த ராதாவிடம் உதவி கேட்டேன். அவர் தான் எனக்கு பண உதவி செய்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்.

Actress Kutty Padmini has say in an interview about her worst experience in cinema

அந்த இயக்குநருக்கு உதவி செய்தேன் : அந்த படத்தில் ஒரு சின்ன ரோல்தான் பண்ணி இருப்பேன், ஏன் வந்தேன் எதற்கு வந்தேன் என்று தெரியாதபடி ஒரே ஒரு சீனில் வந்து போய் இருப்பேன். பல வருடங்கள் கழித்து நான் ஒரு தயாரிப்பாளரான பிறகு, இந்த இயக்குநர் தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியாத நிலையில் இருந்தார். இந்த தகவல் எனக்கு வந்ததும், அவரை கூப்பிட்டு இரண்டு சீரியலில் வாய்ப்பு கொடுத்து, குழந்தைக்கு ஸ்கூல் பீசும் கட்டினேன்.

மகேந்திரன் வாய்ப்பு கொடுத்தார் : இந்த விஷயத்தை நான் பெருமைக்காக சொல்லவில்லை, உன்னுடைய புத்தி அப்படி, ஆனால் நான் அப்படி இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால், நான் இயக்குநர் மகேந்திரனிடம் படவாய்ப்பை கேட்ட போது, எதைப்பற்றியும் கேட்காமல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். எப்போதும் துரோகம் செய்தவர்களை பற்றி நினைத்து கவலைப்படுவதை விட்டு விட்டு நம்ம வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்று பார்க்க வேண்டும் என்று குட்டிபத்மினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.