செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்!| Joe Biden To Visit India In September, US Calls 2023 Big Year For India Ties

வாஷிங்டன்: செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார் என அமெரிக்க அமைச்சர் டொனால்ட் லூ தகவல் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார்.

இது குறித்து அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமைச்சர் டொனால்ட் லூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிச்சயமாக 2023ம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்துகிறது.

அமெரிக்கா ‘ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு’ மாநாட்டை நடத்துகிறது.

அதே போல் ஜி-7 மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. இது நம் அனைவருக்கும் நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். அடுத்த சில மாதங்களில் என்ன வரப்போகிறது என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.

latest tamil news

இந்தியா-அமெரிக்க உறவுகளில் 2023 ம் ஆண்டு ஒரு பெரிய ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்தப் புத்தாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பல அற்புதமான விஷயங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் தலைமை உலகில் நன்மைக்கான சக்தியாக நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.