கனேடிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி


ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போரில், ராணுவ உதவி செய்ததற்காக கனேடிய பிரதமருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைன் பாரிய இழப்பை சந்தித்துள்ளது. உக்ரைன் மக்களது வாழ்வாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

justin trudeau/ஜஸ்டின் ட்ரூடோ@afp

ரஷ்யாவுடனான போரில் சிறிய நாடான உக்ரைனுக்கு, உலக நாடுகள் பலவும் ராணுவ உதவி செய்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் சில ஐக்கிய நாடுகளும் ராணுவ உதவு செய்கின்றன.

மேலும் ஸ்பெயின் கூட தற்போது லீயோபோர்ட் என்ற பீரங்கியை தற்போது அனுப்பியுள்ளது.

இந்த போரில் உக்ரைனின் பெரும் பகுதிகள் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

Volodymyr Zelenskyy/வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, justin trudeau/ஜஸ்டின் ட்ரூடோ@theglobal&mail

எதிர்பாராத விதமாக ரஷ்யா தொடுக்கும் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் பாரிய அளவு இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.

கனேடிய பிரதமருக்கு நன்றி

தொடர்ந்து போரில் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் கனடா நாட்டிற்கு உக்ரைன் நன்றி தெரிவித்துள்ளது.

justin trudeau/ஜஸ்டின் ட்ரூடோ@theglobal&mail

மேலும் உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்கியதற்காக கனேடிய ஜனாதிபதி (justin trudeau)ஜஸ்டின் ட்ரூடோவுக்கு,  ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)  நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கியின் ட்விட்டர் பதிவில்,”கூடுதல் இராணுவ உதவி வழங்கிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.”

“கனடா மற்றும் கனேடிய மக்கள் எங்களுடன் வலுவாக நிற்கிறது என்பதை நிரூபிக்கிறது, ஏனெனில் நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம் மற்றும் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.”

“கனடா, எங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து ஆதரவு அளிக்குமென நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.