Tamannaah:விஜய் ஒரு பச்சோந்தி: தமன்னா

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Tamannaah about Vijay Varma: லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் தன்னுடன் சேர்ந்து நடித்த விஜய் வர்மாவை பச்சோந்தி என்று கூறியிருக்கிறார் தமன்னா.

​தமன்னா காதல்​தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகிறார்கள். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. காதலை அண்மையில் தான் உறுதி செய்தார் தமன்னா. இந்நிலையில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நெருக்கமாக நடித்தது பற்றி பேசியிருக்கிறார்.ஐஸ்வர்யா​ரசிகர்களுடன் பேசி..க்யூட்டாக போஸ் கொடுத்த ஜஸ்வர்யா ராஜேஷ்!​​பாதுகாப்பாக உணர்கிறேன்​Vijay: ஒரு வருங்கால முதல்வர் இப்படி சொல்லலாமா விஜய்: இந்தா கெளம்பிட்டாங்கல்லமுத்தக் காட்சிகளில் நடிப்பது இல்லை என்கிற கொள்கையை வைத்திருந்தார் தமன்னா. 18 ஆண்டு கால கொள்கையை விஜய் வர்மாவுக்காக தளர்த்தியாக அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 பற்றி தமன்னா கூறியதாவது, விஜய்யை தவிர வேறு எந்த நடிகருடன் இருக்கும்போதும் பாதுகாப்பாக உணரவில்லை. பாதுகாப்பாக உணர்வது ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியம் ஆகும் என்றார்.

​பச்சோந்தி விஜய்​விஜய் என்னை பாதுகாப்பாக உணர வைத்தார். அதனால் பயம் என்பதே இல்லாமல் போனது. எல்லாத்தையும் ஈஸியாக்கினார் விஜய். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒரு கதாபாத்திரத்தை அணுகும் முறையில் விஜய் ஒரு பச்சோந்தி. கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறிவிடுவார். அவர் நடிப்பில் வெளியான அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

​அதனால் நடித்தேன்​லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் எதுவும் இல்லை என்றாலும் கூட இயக்குநர் சுஜோய், விஜய்யிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன். அதனால் தான் லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் நடிக்க விரும்பினேன் என்றார் தமன்னா. அவரும், விஜய் வர்மாவும் நெருக்கமான காட்சியில் நடித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

​தமன்னா சிம்பிள்​தமன்னா குறித்து விஜய் வர்மா கூறியதாவது, லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் வந்த கதாபாத்திரத்திற்கு தமன்னா தான் மிகவும் பொருத்தமானவர். சேர்ந்து நடித்ததில் சந்தோஷம். பாகுபலி படத்தில் தமன்னாவை பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் சிம்பிளானவர், திறமையானவர் என்றார்.

​ஜீ கர்தா​Tamannaah: படுக்கையறை காட்சிகளில் நடித்தது ஏன்?: தமன்னாவின் விளக்கத்தால் ரசிகர்கள் கோபம்லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மட்டும் அல்ல ஜீ கர்தா வெப்தொடரிலும் தமன்னா படுக்கயறை காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனியும் இது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் தம்மு என விளாசியுள்ளனர். ஜீ கர்தா பற்றி தமன்னா கூறியதாவது, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அந்த காட்சிகளை வைக்கவில்லை. ரிலேஷன்ஷிப் டிராமாவில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் எல்லாம் முக்கியமானவை ஆகும். மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அப்படித் தான் இருக்கும் என்றார்.

​ரசிகர்கள் விருப்பம்​தமன்னாவுக்கும், விஜய் வர்மாவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தமன்னா பற்றி யாருடனும் சேர்த்து செய்தி வரவில்லை. இந்நிலையில் அவர் முதல் முறையாக ஒருவரை காதலித்திருக்கிறார். அந்த காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​விஜய்யிடம் பிடித்த விஷயம்​முன்னதாக தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவியது. அதற்கே ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். தமன்னா வாழ்வில் காதல் வந்த வேகத்தில் பிரேக்கப் ஆகணுமா, அவர் ரொம்ப பாவம் என்றார்கள். அது வெறும் வதந்தி என்று தெரிந்த பிறகே நிம்மதி அடைந்தார்கள். தமன்னாவையும், விஜய்யையும் மாலையும் கழுத்துமாக பார்க்க ரசிகர்கள் துடிக்கிறார்கள். விஜய் வர்மா தன் உலகத்தை மாற்றாமல் அதை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டது மிகவும் பிடித்திருக்கிறது என தமன்னா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.