Thalapathy Vijay:யாருடன் கூட்டணி, தடுத்தால் என்ன செய்வது?: பக்காவா பிளான் போட்ட விஜய்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Vijay in politics: அரசியலுக்கு வரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் விஜய் யாருடன் கூட்டணி சேர மாட்டார் என்பது நா ரெடி பாடலை பார்த்தாலே தெரிகிறது என பேச்சு கிளம்பியிருக்கிறது.

​தளபதி விஜய்​Tamannaah:விஜய் ஒரு பச்சோந்தி: தமன்னாகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அவர் சும்மா நண்பா, நண்பி என்று சொன்னாலே அரங்கம் எல்லாம் அதிரும். இந்நிலையில் தனக்கு பின்னால் இருக்கும் ரசிகர்கள் படையை நம்பி அரசியலில் குதிக்க முடிவு செய்துவிட்டார் விஜய். அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என தற்போதே பேச்சு கிளம்பியிருக்கிறது. அதற்கு விஜய் பதில் அளித்துவிட்டார்.ஐஸ்வர்யா ராஜேஷ்​ரசிகர்களுடன் பேசி..க்யூட்டாக போஸ் கொடுத்த ஜஸ்வர்யா ராஜேஷ்!​​நா ரெடினு சொன்ன விஜய்​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் நா ரெடி பாடல் வெறும் பாட்டு அல்ல தளபதியின் அரசியல் வருகை குறித்த விளக்கம் என்றே பார்க்கப்படுகிறது. நான் ரெடி தான் வரவா அண்ணன் தனியா வரவா என பாடியிருக்கிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர ஆழம் பார்க்கவில்லை, தயாராகிவிட்டார். சிங்கம் சிங்கிளாகத் தான் வரும் என்பதையும் கூறிவிட்டார் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
​தடுத்தால் என்ன செய்வது?​விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள் என பேசப்படுகிறது. இந்நிலையில் எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா என பாடியிருக்கிறார் விஜய். கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு. இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச் எனக்கு, புரிதா உனக்கு என விஜய் பாடியிருப்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
​துணிந்த விஜய்​தான் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் பிரச்சனை செய்வார்கள் என்பது விஜய்க்கு தெரியும். எல்லாத்துக்கும் துணிந்து தான் வருகிறார். எங்கள் அண்ணனை ஒன்னும் செய்ய முடியாது. 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகப் போகிறார் விஜய்ணா. அதை யாராலும் தடுக்க முடியாது. திராவிட ஆட்சியை முடித்து வைக்கப் போகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
​போஸ்டர் அடி​போஸ்டர் அடி அண்ணன் ரெடினு விஜய்ணாவே பாடிவிட்டார். இனிமேல் தான் இருக்கு வேடிக்கை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவர்கள் அடித்த போஸ்டர்களில் இரண்டால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒரு போஸ்டரில், 65 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிகள் மாறினாலும்.. மக்கள் துயர்படும் காட்சிகள் மட்டும் மாறவில்லை..தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி. உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி. 2026- time to lead என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
​இது ஒரு அறிவிப்பு​நா ரெடி வெறும் பாடல் அல்ல. விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பு. மேலும் ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் விஜய் தெளிவாக கூறிவிட்டார். எங்களுக்கு இது போதும். ஏற்கனவே வருங்கால வாக்காளர்களை சந்தித்து பேசிவிட்டார். அவர்களின் வாக்கு விஜய்ணாவுக்கே. எல்லாம் செட்டாகிடுச்சு என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே நா ரெடி பாடலில் தண்ணி அடிப்பது பற்றி விஜய் பாடியிருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​Vijay: ஒரு வருங்கால முதல்வர் இப்படி சொல்லலாமா விஜய்: இந்தா கெளம்பிட்டாங்கல்ல

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.