சென்னை: மாலத்தீவை தொடர்ந்து சில நடிகைகள் இலங்கைக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர். அந்த வரிசையில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சுஜா வருணி தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே அவர் எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுஜா வருணியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஸ்கர்ட்டையே டாப்ஸ் ஆக்கிட்டீங்களே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குத்தாட்ட நடிகை சுஜா வருணி: 2002ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 எனும் தமிழ் படத்தில் அறிமுகமானவர் சுஜா வருணி. அதன் பின்னர் வர்ணஜாலம் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு குத்தாட்ட நடிகையாக மாறினார்.
மாயாவி, வாத்தியார், லீ, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களில் குத்தாட்டம் போட்டு அசத்திய சுஜா வருணி நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக மிளகா படத்திலும் நடித்திருந்தார்.
பிக் பாஸ் பிரபலம்: பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுஜா வருணி கார் டாஸ்க்கில் சினேகனுக்கு செம டஃப் கொடுத்திருந்தார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக உள்ளே வந்த சுஜா வருணி 14 நாட்களிலேயே வெளியேறினார்.
அதன் பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனமாடிய சுஜா வருணி டைட்டில் வின்னராகவும் மாறி கெத்துக் காட்டினார்.
இலங்கை டூர்: இன்ஸ்டாகிராமில் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வரும் சுஜா வருணி தற்போது இலங்கைக்கு ஜாலி டூர் சென்றுள்ளார்.
சொகுசு படகில் இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
அது ஸ்கர்ட் தானா?: நடிகை சுஜா வருணி டாப்ஸ் அணியாமல், தனது ஸ்கெர்ட்டையே மேலே வரை ஏற்றி அணிந்து தனது முன்னழகை மறைத்துள்ளாரா என அவரது ஹாட் உடையை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

கடல் உப்பு உங்கள் கவலைகளை கரைக்கும் என்றும் கேப்ஷன் கொடுத்த நிலையில், டூருக்கு போயிட்டு வந்து ஒரு கலக்கு கலக்குவீங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
டிரெஸ் போடாதது போல: அதிலும், ஒரு போட்டோவில் வெறும் தொப்பியை மட்டும் வைத்து தனது முன்னழகை மறைத்தது போல சீட் செய்து அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவுக்கும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த சுஜா வருணியை பார்த்து பலரும் பலவிதமான ஹாட் கமெண்ட்டுகளை போட்டு ஃபயர் விட்டு வருகின்றனர்.