சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடந்த ‘சிற்பி’ நிறைவு விழாவில் முதலமைச்சர்
கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்வித்துறையில் காலை சிற்றுண்டி திட்டம் முக்கியமான சாதனை. இதேபோல்,
பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள்
இல்லம் தேடிக் கல்விநான் முதல்வன்பள்ளி மேலாண்மைக் குழுக்கள்பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலிசிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்“மாணவர் மனசு” என்ற ஆலோசனைப் பெட்டிகணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிஉயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்வகுப்பறை உற்று நோக்கு செயலிமின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி
சிற்பி திட்டம் என்றால் என்ன?
ஆகிய திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ’சிற்பி’ என்ற திட்டம் சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் படிப்பில் School first எடுக்க வைக்கின்ற மாதிரி, ஒழுக்கத்திலும், பொறுப்பிலும், முதன்மையானவர்களாக ஆக்குகின்ற திட்டம்தான் இந்த ‘சிற்பி திட்டம்’. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வடிவமைத்தார்.
வெற்றிகரமாக நிறைவு விழா
2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக இன்றைக்கு நீங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறீர்கள் அதை பார்த்து நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இப்போது நிறைவு விழா நடத்திக்கொண்டு இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, மாணவர்களை தரமான‘மனிதர்களாக’ உருவாக்குதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன்.
நான் முதல்வன் திட்டம்
இதில் முக்கியமாக ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கின்ற திட்டமாக இது அமைந்திருக்கிறது. நீங்கக் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்! நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள்! சமூகத்தைப் படியுங்கள்! அந்தக் கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்!
படிப்பு முக்கியம்
அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்ளுங்கள்! அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள்! புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள்! படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.