Samantha: சரியாகாத பிரச்சனை.. திடீரென சினிமாவை விட்டே தற்காலிகமாக விலக முடிவெடுத்த சமந்தா.. ஏன்?

சென்னை: நடிகை சமந்தா சினிமாவில் இருந்து அதிரடியாக ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா உலகத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 8 மாத காலம் சினிமாவுக்கு பிரேக் விட்டு இருந்த சமந்தா தனது உடல் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

யசோதா, சாகுந்தலம் படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிட்டாடல் வெப்சீரிஸிலும் சமந்தா நடித்து முடித்துள்ளாராம்.

நடிப்புக்கு பிரேக் விடும் சமந்தா: நடிகை சமந்தா திடீரென நடிப்புக்கு ஒரு குட்டி பிரேக் விடப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டு தனியாக வாழ்ந்து வரும் சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பெரிய நடிகையாக வலம் வர ஆசைப்பட்டார்.

ஆனால், திடீரென அவரை தாக்கிய மயோசிடிஸ் எனும் அரிதான நோய் பாதிப்பு அவரை நிலைகுலைய செய்தது. சுமார் 8 மாத காலம் நடிக்கவே முடியாமல் எழுந்து நடக்கவும் முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா யசோதா படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான் பட்ட வேதனைகளை வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கையில் இருக்கும் படங்கள் ஓவர்: சாகுந்தலம் படம் சொதப்பிய நிலையில், அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள குஷி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் சமந்தா.

மேலும், பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப்சீரிஸ் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், புதிதாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எந்தவொரு படத்திலும் சமந்தா கமிட் ஆகவில்லையாம்.

 Samantha plans to take a one year break from acting in cinema buzz trending

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டாராம்: அதே போல சில படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டிருந்த நிலையில், அந்த படங்களின் அட்வான்ஸையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு பின்னணியில் என்ன காரணம் என விசாரணைகள் கிளம்பிய போது தான் நடிகை சமந்தா நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒருவருஷத்துக்கு ஓய்வு: நடிகை சமந்தா புதிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஓய்வெடுத்து தனது உடல்நிலையை முழுவதுமாக சரி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சமந்தா கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், அதனையும் பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கஷ்டப்பட்டு நடித்து வந்தார். இந்நிலையில், ஓராண்டு ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் அவர் நடிக்க வருவார் எனக் கூறுகின்றனர்.

சமந்தாவுக்காக பிரார்த்தனை: நடிகை சமந்தாவின் உடல்நிலை சீக்கிரமாக பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்றும் அவர் எப்போதும் சந்தோஷாமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருந்தாலே எங்களுக்கு போதும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகை சமந்தாவுக்காக பிராத்தனை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யை போலவே சமந்தாவும் குட்டி பிரேக் எடுக்கப் போகிறாரா என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் கிளம்பி உள்ளன. விரைவில் இது தொடர்பாக நடிகை சமந்தாவே அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.