கான்பூர்: மணமேடையிலேயே மாப்பிள்ளை மலங்க மலங்க விழித்துவிட்டார்.. அப்படி என்ன செய்தார் அவருடைய மாமியார்?
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.
மணமக்கள்: இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. மணப்பெண்களே தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் உண்டு..
அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன…
மாப்பிள்ளை: சில சமயம் கல்யாண மேடையே ரணகளமாகிவிடும். இப்படித்தான், வடமாநிலத்தில், மணமேடையில் மணமக்கள் நின்றிருந்தனர். அப்போது, மணமகனுக்கு அங்கிருந்தவர்கள் ஸ்வீட் தந்துள்ளார்கள். உடனே அந்த ஸ்வீட்டில் இருந்து, கொஞ்சம் எடுத்து, பக்கத்தில் நின்றிருந்த மணமகளுக்கு ஊட்டிவிட போனார்..
அந்த பொண்ணுக்கு ஸ்வீட் பிடிக்காது போல.. மாப்பிள்ளை ஊட்டிவிட முயன்றதுமே, வேண்டாம் என்று தடுத்தார்.. ஆனால், மாப்பிள்ளை தொடர்ந்து கட்டாயப்படுத்தி, கல்யாண பெண் வாய்க்குள்ளேயே ஸ்வீட்டை திணித்துவிட்டார். உடனே கல்யாணப்பெண், பளார் என்று மாப்பிள்ளை கன்னத்தில் 2 வைக்கவும், தடுமாறிய மாப்பிள்ளை, பதிலுக்கு அந்த பெண்ணை அறையவும், இப்படியே அடிதடியாகி கல்யாணமே நின்றுவிட்டது.
இப்படி எத்தனையோ நிகழ்வுகள் வடமாநிலங்களிலேயே உண்டு.. இதோ உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. ஒரு தம்பதிக்கு தடபுடலாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஊரே திரண்டு வந்து மண்டபத்தில் குவிந்திருந்தது.. மணமேடையில் மணமக்கள் பூரித்து காணப்பட்டனர்.. கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள், மேடையேறி சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வந்தனர்.
முத்தம்: அப்படித்தான், மணமகள் தரப்பில் சொந்தக்காரர்கள் வந்துள்ளனர்.. அவர்களை வரவேற்கும்போது, மணப்பெண் திடீரென பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்… யார் யாருக்கோ தன் மனைவி இப்படி முத்தம் தருகிறாரே என்று மணமகன் அதிர்ச்சியாகி விட்டார்.. தன் பக்கத்தில் நின்றுகொண்டு, மணமகளின் செயலால் மணமகன் நெளிந்தார்.

அந்த நேரம்பார்த்து, அந்த மணமகளின் அம்மா, அதாவது மாப்பிள்ளையின் மாமியார், சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதினாராம்.. இதை பார்த்து அதற்கு மேல் வெலவெலத்து போய்விட்டார் மாப்பிள்ளை.
அதிர்ச்சி மாப்பிள்ளை: தாயும், மகளும் இப்படி இருக்கிறார்களே என்று அவர்களது செய்கையினால் உச்சக்கட்ட விரக்திக்கு போனதுடன், ஆன் தி ஸ்பாட்டிலேயே கல்யாணத்தையும் நிறுத்திவிட்டார் மாப்பிள்ளை..
இதை பற்றி மணமகனின் குடும்பத்தினர் சொல்லும்போது, “23 வயதாகிறது.. அந்த பெண் ஒரு பட்டதாரி. கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் மண்டபத்தில் இருந்தனர்.. பெண் வீட்டில், திருமண மண்டபத்துக்கு வந்தபோது ரிசப்ஷன் ஆரம்பித்துவிட்டது.. பாதியில்தான் வந்து சேர்ந்தார்கள்.. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே மணப்பெண்ணின் அம்மா, போதையாகிவிட்டார்.. பிறகு அவராகவே டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார்..
அப்போதுதான், சிகரெட் பிடித்து, வந்திருந்த விருந்தினர்கள் முகத்தின் மீது ஊதி தள்ளினார்.. அதேபோல, தன்னுடைய நண்பர்களுக்கு மணப்பெண் ஃப்ளையிங் கிஸ் தந்தார்.. எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக மணமகன் நினைக்கிறார்.. இதை பார்த்து மாப்பிள்ளை எரிச்சலடைந்து, அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார்.. மாப்பிள்ளை விருப்பம் இல்லாமல் எப்படி கல்யாணம் செய்து வைப்பது? அதனால்தான் கல்யாணத்தை நிறுத்தினோம்” என்றனர்..
பரபரப்பு: எனினும், இது தொடர்பாக போலீசார் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றார்களாம்.. ஆனால் மணமகள் அனுமதிக்கவில்லையாம்.. அப்படிப்பட்ட மாப்ளையே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இந்த சம்பவம்தான், உபியில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.