Salaar: 'கேஜிஎஃப்' மூன்றாம் பாகமா..?: 'சலார்' டீசரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா.!

பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘சலார்’ படம் உருவாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்களைகிளப்பி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘கேஜிஎஃப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ உருவாகி வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகாந்தூர் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘சலார்’ படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகயிருக்கிறது.

Maamannan:வடிவேலுக்கு தேசிய விருது கொடுக்கணும்: மாமன்னனை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்.!

இந்நிலையில் ‘சலார்’ முதல் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசர் அப்படியே ‘கேஜிஎஃப்’ சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே பின்னணியில் பில்டப் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. இதனால் ‘சலார்’ படம் கேஜிஎஃப் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்ற கருத்து இணையம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகின்றனர்.

மேலும் ‘கேஜிஎஃப்’ படத்தில் இடம்பெற்ற சில எண்கள் அப்படியே வரிசை மாறாமல் ‘சலார்’ படத்தின் டீசரிலும் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். அத்துடன் ‘கேஜிஎஃப்’ நாயகன் யாஷ், பிரபாஸ் இருவரும் ‘சலார்’ படத்தில் இடம்பெற்றிருக்க பல வாய்ப்புகள் உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Arthana Binu: தந்தை மீது ‘கடைக்குட்டி சிங்கம்’ பட நடிகை பகீர் புகார்: வெளியான வீடியோவால் பரபரப்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.