அமேசான் பிரைம் டே சேல்: அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) ஜூலை 15, அதாவது இன்று முதல் தொடங்கி ஜூலை 16 வரை இருக்கும். இந்த விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பல தயாரிப்புகளில் வலுவான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஐபோனின் சமீபத்திய மாடல்களை வாங்க பெரும்பாலான மக்கள் இந்த விற்பனைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக விற்பனையில் வலுவான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
அப்படி பலர் வாங்க ஆசைப்படும் ஒரு சமீபத்திய மாடல்தான் iPhone 14 இன் 128 GB சேமிப்பக மாறுபாடு. இந்த வகை ஐபோனை அனைவரும் வாங்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் விலை சுமார் 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் காரணமாக மக்கள் அதை வாங்கும் எண்ணத்தை பெரும்பாலும் கைவிடுகிறார்கள். ஆனால் இப்போது இந்த ஐபோனை வாங்க தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அமேசான் பிரைம் டே விற்பனையில், இந்த மாறுபாட்டை மிகவும் லாபகரமான விலையில் வாங்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Amazon Prime Day Sale: ஆப்பிள் ஐபோன் 14 இல் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?
வாடிக்கையாளர்களால் நம்ப முடியாத தள்ளுபடிகள் அமேசானின் இந்த விற்பனையில் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில், ஐபோன் 14 இன் நீல வண்ண மாறுபாடு 128 ஜிபி சேமிப்பு மாடலில் அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் உண்மையான விலையைப் பற்றி பேசினால், அது 79,900 ரூபாய் ஆகும். ஆனால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இந்த மாடலில் 16% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த தொலைபேசியை வாங்க மிகக் குறைந்த தொகையை செலுத்தினால் போதும்.
அமேசான் விற்பனையில் அளிக்கப்படும் 16 சதவிகித தள்ளுபடியைப் பயன்படுத்திய பிறகு, இந்த ஐபோன் மாடலை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ. 79,900 செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.66,799 செலுத்தினால் போதும். இந்த தொகை இதே வகைக்கு மற்றொரு ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் வழங்கப்படும் விலையை விட மிகக் குறைவாகும். ஆகையால் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன் மாடலை வாங்க இதைவிட சிறந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது.
இந்த விற்பனையை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்திக்கொள்ள இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. அதன் பிறகு இந்த விற்பனை முடிவடைந்து விடும். மேலும், அதன் பிறகு ஐபோனின் விலைகள் முன்பு போலவே இருக்கும்.
கூடுதல் தகவல்:
இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகம் ஆகும்
இந்த விற்பனையின் போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3), மோடோ ரேஸர் 40 அல்ட்ரா ( Moto Razr 40 Ultra), சாம்சங் கேலக்சி கேலக்சி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) மற்றும் ரியல்மீ நார்சோ 60 ( Realme Narzo 60) தொடர் போன்கள் அடங்கும்
எதில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும்
– ஸ்மார்ட்போன்கள், துணைக்கருவிகள் – 40%
– எலக்ட்ரானிக்ஸ், துணைக்கருவிகள் – 75%
– வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பொருட்கள் – 70%
– ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி – 65%
– அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் எக்கோ – 55%
இவை அனைத்தையும் தவிர, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையின் போது தனித்தனியாக 10% தள்ளுபடி கிடைக்கும்.