IND vs PAK: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சைக் கருத்து

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் மோத இருக்கின்றன. இந்த போட்டிகளை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவீத் உல்ஹசன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  

இந்தியா – பாகிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானை (IND vs PAK) எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் தொடக்க போட்டிகளிலும், இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகள் இலங்கையிலும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. உலக கோப்பையில் அக்டோபர் 15 ஆம் தேதி சந்தித்துக் கொள்ள இருக்கின்றன.

பாக் வீரரின் சர்ச்சைக் கருத்து

இந்த போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ராணா ரவீத் உல்ஹசன், இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறியுள்ளார். நாதிர் அலியின் போட்காஸ்டில் பேசிய அவர், இப்படியான சர்ச்சைக் கருத்தை  கூறியிருக்கிறார். அவரின் இந்தக் கருத்து இப்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியுள்ளது,. 

இந்திய அணிக்கு சாதகம்

தொடர்ந்து பேசிய அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராணா நவீத் உல் ஹசன், இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியும் சிறப்பாக உள்ளது. போட்டி பரபரப்பாக இருக்கும். ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.