Rajinikanth: தப்பானவர்களின் நட்பால் கெட்டப் பழக்கங்களை கற்ற ரஜினி: அன்பால் திருத்திய லதா

73 வயதாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்தால் இன்னும் வாலிபர் போன்று சுறுசுறுப்பாக இருக்கிறார். ஒரு காலத்தில் மது, சிகரெட் பழக்கம் இருந்ததை அவர் ஒருபோதும் மறைத்தது இல்லை.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
தனக்கு சில கெட்டப்பழக்கங்கள் இருந்தது குறித்து ரஜினி கூறியதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒய்.ஜி. மகேந்திரன் தான் என்னை லதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்களுக்கு திருமணம் நடக்க உதவி செய்தார். எனக்கு தற்போது 73 வயதாகிறது. நான் ஆரோக்கியமாக இருக்க என் மனைவி லதா தான் காரணம்.

நான் பஸ் கன்டக்டராக இருந்தபோது சில தவறானவர்களின் நட்பால் பல மோசமான பழக்கங்கள் எனக்கு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டன் சாப்பிட்டு வந்தேன். மேலும் தினமும் மது அருந்தினேன். கணக்கு இல்லாமல் சிகரெட் சாப்பிட்டு வந்தேன்.

சினிமாவுக்கு வந்த பிறகு பணமும், புகழும் கிடைத்த பிறகு அது எல்லாம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் என நீங்களே யோசித்துப் பாருங்கள்.

சைவம் சாப்பிடுபவர்களை ஒரு மாதிரி பார்த்தேன். எப்படித் தான் இதை சாப்பிடுகிறார்களோ என நினைத்தேன். என் மனைவியின் அன்பும், மருத்துவ உதவியும் தான் நான் கெட்டப் பழக்கங்களில் இருந்து வெளியே வர உதவி செய்தது.

முன்பெல்லாம் தினமும் எனக்கு மட்டன் பாயா, ஆப்பம், சிக்கென் தான். சிகரெட், மது, மாமிசம் ஆகியவை மோசமான காம்பினேஷன். அளவு இல்லாமல் மாமிசம் சாப்பிட்டு மது அருந்தி, சிகரெட் பிடிப்பவர்கள் 60 வயது வரை கூட ஆரோக்கியமாக வாழ்வது இல்லை.

60 வயதுக்கு முன்பே உடல்நல பிரச்சனைகள் பலருக்கு வந்திருக்கிறது. அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அது பற்றி நாம் பேச வேண்டாம்.

தன் அன்பால் என்னை முழுவதும் மாற்றினார் லதா. அன்பை காட்டியதுடன் சரியான மருத்துவர்களை நாடி என்னை மாற்றினார் என் மனைவி. அதற்காக நான் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ரஜினிகாந்துக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். உடல் நிலையை மனதில் வைத்து தான் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினி.

Maaveeran Collection: வசூல் வேட்டை நடத்தும் மாவீரன்: நேற்று மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

அவர் தற்போது சைவ பிரியராகிவிட்டார். மது அருந்துவது இல்லை, சிகரெட் பிடிப்பது இல்லை. நடைபயிற்சி, யோகா, உணவுக் கட்டுப்பாடு என உடல்நலத்தை கவனித்து வருகிறார் ரஜினி.

அவருடன் சேர்ந்து படங்களில் நடிக்கும் இளம் நடிகர்கள், நடிகைகளால் கூட ரஜினி அளவுக்கு வேகமாக நடக்க முடியவில்லை. இதை அவருடன் சேர்ந்து நடித்தவர்களே தெரிவித்துள்ளனர்.

இந்த வயதிலும் அவரிடம் இருக்கும் எனர்ஜி, நமக்கு இல்லை. அவருக்கு ஈடாக நடக்க முடியாது. அவர் நடந்தால், நாம் ஓடத் தான் செய்ய வேண்டும் என கீர்த்தி சுரேஷ் கூட பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth: தொடர்ந்து ஒரே ஷூட்டிங்: ஓய்வெடுக்க மாலத்தீவுகளுக்கு சென்ற ரஜினி

ரஜினி தற்போது மாலத்தீவுகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். லால் சலாம் படப்பிடிப்பை முடித்த கையோடு மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.