மலையக பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை அடுத்த வருடமளவில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எந்த சமூகத்திற்கும் கல்வித்துறையில் அசாதாரணம் இடம்பெறுவதற்கு இடமளிக்க அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட அமைச்சர், கொட்டகலப் பிரதேசத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு அந்தப் பிரதேசத்தை மேற்பார்வை செய்த போது இந்த தகவலை தான் வழங்கியதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நுவரெலிய மாவட்டத்தை அடிப்படையாகக் வைத்து பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பாக அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
மலையகத்தில் காணப்படும் 95 வீதத்தை விட அதிகமான பாடசாலைகள் ஆரம்பத்தில் அந்தந்த பெருந்தோட்ட கம்பெனிகளினது பாடசாலைகளாகவும் பின்னர் அவை மலையக பாடசாலைகளாகவும் மாறின. இந்த பாடசாலைகள் அதிகமானவை மாகாண சபைகளின் கீழ் வருகின்றன.
விசேடமாக ஊவா மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இந்த தோட்டப் பாடசாலைகளில் அமைந்துள்ளன. இம்மலையகப் பாடசாலைகளி அந்தந்த பிரதேசங்களின் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் இங்கு மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. இந்த தோட்ட பாடசாலைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கிணங்க அந்த பிரதேசங்களின் தேவைக்கேற்ப தமிழ் மொழி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .
மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்ட பலர் காணப்படுகிறார்கள். அவர்களை அமைச்சரவை அனுமதியுடன் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொழிற்பயிற்சி பாட நெறிகளை பாடசாலை மட்டத்தில் ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் காணப்படும் பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் விபரித்தார்.