வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
![]() |
இது குறித்து கூறப்படுவதாவது: உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் , அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
![]() |
நாடு முழுவதும் கடந்த சில மாதங்காக உணவு மற்றும் தானியங்களின் விலை மிகவும் அதிகரித்து வந்துள்ளது. கோதுமை, அரிசி, பால், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் நாடு முழுவதும் அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement