சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.
படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரும் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என லோகேஷ் பேட்டி: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. முன்னதாக மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த விஜய் மற்றும் லோகேஷ் கனரகாஜ், இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். விஜய் மற்றும் த்ரிஷா இந்தப் படத்தின்மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு தற்போது சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் விஜய்யின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் பேட்ச் வொர்க்கிற்காக சமீபத்தில் மீண்டும் படக்குழு காஷ்மீர் சென்றிருந்தது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அதற்கான பணிகளை படக்குழு தற்போது முடுக்கி விட்டுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என்றும் லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
லியோ தனக்கு மிகவும் முக்கியமான படம் என்றும் இந்தப் படத்தில் முதல்முறையாக தான் ஒரு விஷயத்தை முயற்சி செய்துள்ளதாகவும் லோகேஷ் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக விஜய், அதிகமான மெனக்கெடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்க தான் மிகவும் உற்சாகமாக காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே தான் வங்கி வேலையை விட்டதற்கான காரணத்தையும் லோகேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். தான் தன்னுடைய சட்டையின் முதல் பட்டனை போட விரும்பவில்லை என்றும் அதேபோல தினந்தோறும் தனது தாடியை ஷேவ் செய்யவும் விரும்பவில்லை என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். இதுதான் வங்கிப் பணிகளில் அதிகமான எல்லோரும் கூறும் புகார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.