ஜப்பானுக்கு அடிச்ச ஜாக்பாட்… இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… ஒரே மாசத்தில் 20 லட்சம் பேரை தாண்டிருச்சு!

உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ்
ருத்ர தாண்டவம் ஆடி மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது. இதன் தாக்கம் பல்வேறு வகைகளில், பல்வேறு துறைகளில் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் சுற்றுலா துறை முடங்கியது. அதில் ஜப்பான் நாடும் விதிவிலக்கல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை… அவசர நிலையை அறிவித்த ஜப்பான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்நிலையில் கொரோனா தொற்று நீங்கி இயல்பு நிலை திரும்பியது. வர்த்தகமும், பொதுமக்களின் வாழ்க்கையும் படிப்படியாக பழைய படி மாறியது. ஜப்பானை பொறுத்தவரை விசா இன்றி பயணிக்கும் வசதியை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. கடந்த மே 8ஆம் தேதி எஞ்சியிருந்த கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கியது. இதன்மூலம் சுற்றுலா துறை படிப்படியாக மேம்படத் தொடங்கியது.

ஐரோப்பாவில் தாங்க முடியாத வெப்பம்… தலைகீழாக மாறிய வானிலை… படாத பாடு படும் பொதுமக்கள்!

சுற்றுலா பயணிகள் வருகை

நடப்பாண்டின் முதல் பாதியில் 10.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் ஜப்பான் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஜூன் மாதம் மட்டும் 2.07 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து ஜப்பான் வரும் பயணிகள் தான் அதிகப்படியாக இருக்கின்றனர்.

ஜப்பான் நாட்டின் நிலவரம்

இந்த எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் 55 சதவீதம் அதிகரித்து 2,04,500 ஆக பதிவானது கவனிக்கத்தக்கது. கடந்த மே மாதம் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் ஜப்பான் நாட்டிற்கு வந்திருந்தனர். கடைசியாக பிப்ரவரி 2020ல் 2 மில்லியனை கடந்திருந்தது. அதன்பிறகு முதல்முறை இப்படி ஒரு சாதனையை எட்டி பிடித்திருக்கிறது.

வாட்டி வதைக்கும் வெப்ப அலைகள்

இந்த தகவலை அந்நாட்டு தேசிய சுற்றுலா கழகம் (JNTO) உறுதி செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உங்ககிட்ட? அப்ப நீங்க தான் ராஜா… விசா தேவையே இல்லயாம்!

பருவநிலை மாறுபாட்டின் ஒருபகுதியாக உலகின் வட துருவப் பகுதியில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிரித்துள்ளது. இதனை ஜப்பானிலும் பார்க்க முடிகிறது. இப்படி ஒரு சூழலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உச்சம் தொட்டிருப்பது பெரிதும் ஆச்சரியம் அளித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

இது உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜப்பானிற்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒருபக்கம் வெயிலின் கொடுமையை தணிக்க உரிய ஏற்பாடுகள் செய்து வரும் அரசு, மறுபுறம் சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வசதிகளை மேம்படுத்தி கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.