தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு 

2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

2022/07/22ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகப் பரீட்சையின் போது மேற்கொள்ளப்பட்ட தகைமைகளின் பரிசோதனைக்கு அமைவாக முதலாம் சுற்றில் தெரிவு செய்யப்படுவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல், வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கீழே தரப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இங்கு வழங்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படுவதற்கு அவசியமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும், பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முந்தைய சந்தர்ப்பமொன்றில் 2022/07/22 ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் இல. 8.0 – “பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது இணைவதற்கு தகைமையற்றவர்கள்” எனும் பிரிவின் கீழ் 8.1 முதல் 8.6 வரையான பந்திகளில் தரப்பட்டுள்ள பொருத்தமற்ற தகைமைகள் தொடர்பாக வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் அல்லது வேறு ஏதேனும் தகைமைகள் தொடர்பாக பொருத்தமற்றவர்கள் என்பதாக வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “தெரிவு செய்யப்படுவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ளார்” என்பதிலிருந்து இரத்து செய்யப்படுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.