சென்னை: பாக்யலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி, குட்டி டவுசரில் சும்மா சிக்குனு இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் சூரியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரேஷ்மா வந்தது என்னமோ ஒரு சில காட்சிதான் என்றாலும், படம் முழுக்க ரேஷ்மா கதாபாத்திரத்தின் பெயர் வந்து மூலம் பிரபலமானார்.
பாக்கியலட்சுமி சீரியல்: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சன் தொலைக்காட்சியில் வாணி ராணி, வம்சம், மரகதவீணை போன்ற சீரியலில் நடித்து வந்த இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸ் ஆனார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி சீரியலில் ஹீரோவின் இரண்டாவது மனைவியாக, வில்லத்தனம் கலந்து கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மா. இவர் நடித்து வரும் ராதா கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது.இந்த தொடரைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் என்கிற தொடரிலும் ரேஷ்மா நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராம் 1.4 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, அப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அண்மையில் இணையவாசி ஒருவர் உதடு சர்ஜரி செய்து பெரிதாக்கப்பட்டதாக எழுப்பிய கேள்வி சரியான பதில் அடி கொடுத்திருந்தார்.

குட்டி டவுசர்: மேலும், நிறைய பேர் என்னை குண்டு என கிண்டல் செய்கின்றனர். எனக்கு இருக்கும் உடல் பிரச்சனை பற்றி அவர்களுக்கு தெரியாது. நான் தூக்கக்கூடி நேரம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது ரேஷ்பா கருப்பு நிறத்தில் டைட்டான பனியன் மற்றும் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ் லைக்குகளை மலைபோல்குவித்து வருகின்றனர்.