Suriya: சூர்யா பிறந்தநாளில் உயிரிழந்த ரசிகர்கள்.. சூர்யா என்ன செஞ்சாரு தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் கோவா, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடந்து வருகிறது.

நேற்றைய தினம் தனது பிறந்தநாளை சூர்யா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ், பர்ஸ்ட் லுக் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

சூர்யாவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே சூர்யா இருந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்கள் குடும்பத்திற்கு சூர்யா ஆறுதல்: நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இந்தப் படம் அவருக்கு அதிகமான தேசிய விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. மேலும் விமர்சனரீதியாகவும் இந்தப் படம் அதிகமான பாராட்டுக்களை பெற்றிருந்தது. ஓடிடியில் நேரடியாக வெளியான இந்தப் படத்தை அதிகமானோர் பார்த்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய படத் தேர்வுகளில் மிகவும் கவனமாக செயல்பட்டுவருகிறார் சூர்யா.

தொடாந்து ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் 20 சதவிகிதம் வரலாற்று பின்னணி இருக்கும் என்றும் மீதம் 80 சதவிகிதம் பேன்டசியாக கதைக்களம் அமைந்துள்ளதாகவும் படத்தின் இயக்குநர் சிவா பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

On Actor Suriya birthday celebration yesterday his fans died due to current shock

நேற்றைய தினம் சூர்யா பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிவா தன்னை கமர்ஷியல் இயக்குநராக மட்டுமே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் இருந்து இதுபோன்ற ஒரு படைப்பை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவர் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே இருந்தார். ரசிகர்கள் அவரது பிறந்தநாளை பேனர் உள்ளிட்டவற்றை வைத்து கொண்டாடினர். சூர்யாவிற்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் அவரது ஃபேன் பேஸ் மிகவும் அதிகம். அந்த வகையில் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தின் நரசராவ் பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பி சாய் இருவரும் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி பேனர் வைக்கும் விழாவில் பங்கேற்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள் இருந்த நிலையில், இந்த பலி சம்பவம் அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. இதை கேள்விப்பட்ட சூர்யா, உடனடியாக இறந்த ரசிகர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை தான் செய்ய காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். சூர்யாவின் இந்த செயல் ஆந்திர ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.