Maaveeran: 10 நாட்களில் 'மாவீரன்' செய்த வசூல்: 'அந்த' சாதனை படைப்பாரா சிவகார்த்திகேயன்.?

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான ‘பிரின்ஸ்’ படம் தோல்வியை தழுவிய நிலையில் ‘மாவீரன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை குவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்’ படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. ரிலீசான ஒரே வாரத்தில் பல திரையரங்களில் இருந்து இந்தப்படம் தூக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியை ‘மாவீரன்’ சரிக்கட்டும் என சிவகார்த்திகேயன் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே படத்திற்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியானது ‘மண்டேலா’. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகளில் இல்லாமல் நெட்பிளிக்ஸ் மற்றும் டிவியில் வெளியானது ‘மண்டேலா’. தனது முதல் படத்திலே தேசிய விருது வென்று கோலிவுட் சினிமாவையே வியக்க வைத்தார். இதனையடுத்து அவரது இரண்டாவது படைப்பாக தற்போது ‘மாவீரன்’ வெளியாகியுள்ளது.

Jailer: நிஜமாவே அலப்பறையை கிளப்பிட்டாங்க: 15 செகண்டில் காலியான ‘ஜெயிலர்’ பாஸ்கள்.!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு,குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜுலை 14 ஆம் தேதி வெளியானது ‘மாவீரன்’ படம். இந்நிலையில் ரிலீசான நான்கே நாட்களில் இந்தப்படம் ரூபாய் 50 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூபாய் 75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் புதிய படங்கள் வெளியாக இருப்பதால் ‘மாவீரன்’ படம் 100 கோடி கிளப்பில் இணைவது சந்தேகம் என கூறப்படுகிறது. இந்தப்படத்தினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே 21’ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஷுட்டிங் ஸ்பாட்டில் திடீரென நீச்சல் குளத்தில் குதித்த டி. ராஜேந்தர்: சந்தானம் பகிர்ந்த தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.