DD Returns: சந்தானம் இட்ஸ் பேக்.. காமெடி சரவெடி: 'டிடி ரிட்டன்ஸ்' ட்விட்டர் விமர்சனம்.!

தமிழ் சினிமாவில் சந்தானம் ஹீரோவாக மாறிய பின் அவரது காமெடியை சமீப காலமாக மிஸ் செய்வதாக வருத்தப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் ஸ்பெஷல் பிரஸ் ஷோ போடப்பட்டுள்ளது.

இதில் படத்தை பார்த்தவர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் ட்விட்டரில குவிந்து வருகின்றன. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த், மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், டைகர் தங்கதுரை, பெப்சி விஜயன் உள்ளிட்ட மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளங்களே நடித்துள்ளனர். சுரபி நாயகியாக நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

படத்தின் கதை

தனது காதலியான சுரபியை காப்பாற்ற சந்தானத்துக்கு பணம் தேவைப்படுகிறது. அந்த பணம் பேய் பங்களாவில் மாட்டி கொள்கிறது. அந்த பணத்தை மீட்க சந்தானம் அன்ட் கோ செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் கதை. இந்தப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சந்தானம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் தன்னை பழைய மாதிரி பார்க்கலாம் என தெரிவித்திருந்தார்.

Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்காக கமல் செய்துள்ள காரியம்: வியந்து போன கோலிவுட் வட்டாரம்.!

அதே போல் ‘சந்தானம் இஸ் பேக்’ என சொல்லும் அளவிற்கு படம் முழுக்க சிரிப்பு சரவெடிகள். ஆனால் முழு சந்தானம் படம் என சொல்ல முடியாத அளவிற்கு மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் என மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்த சந்தானத்திற்கு தனி பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

Captain Miller Teaser: பிரேமுக்கு பிரேம் மிரட்டல்.. கொல மாஸ்: கேப்டன் மில்லராக மிரள விடும் தனுஷ்.!

இதுதான் படத்தின் காமெடி காட்சிகள் பெரியளவில் வொர்க் அவுட் ஆனதிற்கும் காரணம். தில்லுக்கு துட்டு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை போன்று ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பேய் பட பாணியில் சிரிப்பு சரவெடியாக வெளியாகியுள்ளது. சந்தானம் தனது புரமோஷன் பேட்டிகளில் கூறியதை போன்று இந்தப்படத்தில் பழைய சந்தானத்தை பார்க்கலாம் என்பது உறுதி. மொத்தத்தில் மீண்டும் பேயை வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளார் சந்தானம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.