Jailer Trailer: அடி தூள்.. தரமான சம்பவம்: நெல்சன் திலீப்குமாரை பாராட்டி தள்ளும் தலைவர் ரசிகர்கள்.!

‘ஜெயிலர்’ படத்தின் மாஸான டிரெய்லரை பார்த்து மெர்சலாகியுள்ள ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை பாராட்டி தள்ளி வருகின்றனர்.

மெர்சலான ரசிகர்கள்ரஜினி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது ‘ஜெயிலர்’. இந்தப்படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் அண்மையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறது.
ஜெயிலர் டிரெய்லர்’ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி வருகிறது. இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு போஸ்டரும் ரசிகர்களை மிரள வைத்து வருகிறது. ரஜினியின் ஸ்டைலான, கிளாஸான நடிப்பை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அனல் தெறிக்கும் வசனங்கள்இந்த முன்னோட்ட வீடியோவில், ஆரம்பத்தில் குடும்பத்துக்காக அப்பாவியாக எந்த வம்பு தும்புக்கும் போகாமல் ஒதுங்கி இருக்கும் ரஜினி, ஒருக்கட்டத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார். ‘ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்’, ‘ரொம்ப தூரம் போயிட்டேன். ஃபுல்லா முடிச்சுட்டு தான் வருவேன்’ என அனல் தெறிக்கும் வசனத்தை தனக்கு உரித்தான ஸ்டைலில் மாஸாக ரஜினி பேசுவதை போன்ற காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
மிரட்டும் ரஜினிமொத்தத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக ‘ஜெயிலர்’ உருவாகியுள்ளது டிரெய்லரிலே தெரிகிறது. அத்துடன் படத்தில் ரஜினிக்கு மிரட்டலான பிளாஸ்பேக் இடம்பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முன்னோட்ட வீடியோவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோரை காட்டாமல் உள்ளனர். இதனால் படத்தில் அவர்களின் காட்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையில் எகிறியுள்ளது.பாராட்டி தள்ளும் ரசிகர்கள்இந்நிலையில் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை பாராட்டி தள்ளி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். தலைவரை வேறலெவலில் காட்டி மாஸ் சம்பவம் செய்துள்ளதாக நெல்சனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே ‘ஜெயிலர்’ படம் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பினை, தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் பல மடங்கு எகிற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.