சென்னை: மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த ரவீனா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாரின்,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே பலவிதமான சர்ச்சைகளை கிளப்பிய இத்திரைப்படம் வசூலை அள்ளியது.
