Samantha: சிகிச்சைக்காக பிரபல நடிகரிடம் ரூ. 25 கோடி கடன் வாங்கினேனா.?: சமந்தா விளக்கம்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழும் சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது மேல் சிகிச்சைக்காக ஆறு மாத காலம் பிரேக் எடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தன்னை பற்றி தீயாய் பரவி வதந்தி ஒன்றுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா தொடர்ச்சியாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாகவும், இதற்காக பிரபல தெலுங்கு ந்டிகரிடாம் சமந்தா ரூபாய். 25 கோடி கடனாக வாங்கியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்த வதந்தி தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ‘மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூபாய் 25 கோடி வாங்கினேனா? யாரோ உங்களுக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இதிலிருந்து ஒரு சிறிய தொகையை என் சிகிச்சைக்காக செலவிடுவது மகிழ்ச்சியே.

எனது தொழில் வாழ்க்கையில் இருந்து நான் பெற்ற பணம் மூலம் என்னை நானே கவனித்துக்கொள்ள முடியும். நுற்றுக்கணக்கானோர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை தொடர்பான தகவல்களை பொறுப்புடன் வெளியிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Chandramukhi 2: ‘லக.. லக.. லக’: வேட்டையனை தொடர்ந்து சந்திரமுகியின் என்ட்ரி..!

மயோசிடிஸ் சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து சமந்தா பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் விஜய் தேவாரகொண்டாவுடன் சேர்ந்து ‘குஷி’ படத்தில் நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. ‘குஷி’ படம் விஜய், சமந்தா இருவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தை தவிர்த்து ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் சமந்தா. தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு தனது தோழியும் மேக்கப் கலைஞருமான அனுஷா சுவாமி என்பவருடன் சென்றுள்ளார் சமந்தா. அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jailer: ‘ஜெயிலர்’ டிரெய்லரில் சிவகார்த்திகேயனை கண்டுபிடித்த ரசிகர்கள்: இதென்ன புது ட்விஸ்ட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.