பெங்களூரு நம்ம மெட்ரோ தரமான அப்டேட்… 4 புதிய ரூட்டில்… ஒருபக்கம் நீலமங்கலா, மறுபக்கம் ஒஸ்கோடே!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பர்பிள் லைன் சேவையில் கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரையிலும், கே.ஆர்.புரம் முதல் ஒயிட்பீல்டு வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இடைப்பட்ட பையப்பனஹள்ளி முதல் கே.ஆர்.புரம் ரயில் சேவை இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைஇதையடுத்து இரண்டாம் கட்ட ஏ திட்டத்தில் சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரையிலும், இரண்டாம் கட்ட பி திட்டத்தில் எம்.ஜி.ரோடு முதல் கெம்பகவுடா சர்வதேச விமானம் வரையிலும் வழித்தடம் அமைக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் நாகசந்திரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலான கிரீன் லைன் சேவையும் பயன்பாட்டில் உள்ளது.மும்முரமாக நடக்கும் வேலைகள்இதுதவிர மூன்றாம் கட்ட ஏ திட்டத்தில் ஹெப்பல் டூ ஜே.பி.நகர் 4வது பேஸ் வரையிலும், ஹொசஹள்ளி முதல் கடபகெரா வரையிலும், மூன்றாம் கட்ட பி திட்டத்தில் சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்க வேலைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்ட படி, கிரீன் லைனில் நாகசந்திரா முதல் மாடவரா வரையிலான 3.14 கிலோமீட்டர் தூர வழிப்பாதை செப்டம்பர் 2023ல் பயன்பாட்டிற்கு வருகிறது.
புதிய திட்டங்கள் அமல்மஞ்சள் லைனில் ராஷ்டிரிய வித்யாலயா ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான 19.15 கிலோமீட்டர் தூர வழிப்பாதை டிசம்பர் 2023லும், பிங்க் லைனில் கலேனா அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான 21.25 கிலோமீட்டர் தூர வழிப்பாதை டிசம்பர் 2025லும், ப்ளூ லைனில் சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கிருஷ்ணராஜபுரா வரையிலான 19.75 கிலோமீட்டர் வரையிலான மெட்ரோ பாதை ஜூன் 2026லும் வருகின்றன.
சித்தராமையா ஆலோசனைஅதே ப்ளூலைனில் கிருஷ்ணராஜபுரா முதல் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் வரையிலான 38.44 கிலோமீட்டர் தூர ரயில் பாதை ஜூல் 2026லும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக புதிதாக சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
​காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைஅதில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மற்றொரு ஆலோசனை கூட்டத்தில் குடகு, ஹாசன், மாண்டியா, பெங்களூரு நகர்ப்புற மாவட்டம், சிக்கபல்லபுரா, தாவனகரே, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதியில் முக்கியமான ஒரு விஷயத்திற்கு அச்சாரம் போட்டுள்ளனர்.
புதிதாக 4 வழித்தடங்கள்அதாவது, தொட்டபல்லாபூர், நீலமங்கலா, தேவனஹள்ளி, ஒஸ்கோடே என நான்கு பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். இவற்றை பெங்களூரு நகருடன் இணைத்து விட்டால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேற்குறிப்பிட்ட நகரங்கள் வேற லெவலுக்கு வளர்ச்சி அடையும் என்பதுடன் பெங்களூரு நகரின் நெரிசலும் குறையும். மக்கள் வெளியில் குடியேற ஆரம்பித்து விடுவர். ஏனெனில் மெட்ரோ மூலம் புறநகர்ப் பகுதிகளில் எங்கிருந்தாலும் மெட்ரோ மூலம் விரைவாக பெங்களூரு வந்து சேர முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.