மைசூரு: உலக பிரசித்தி பெற்ற, தசரா திருவிழா நெருங்கும் நிலையில், கர்நாடக சுற்றுலாத் துறை, ‘பிராண்டிங் மைசூரு’ போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:
நான்கு கட்டங்களாக, போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில், முதல் பரிசு 30,000 ரூபாய், இரண்டாம் பரிசு 10,000, மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும்.
சிறப்பு போட்டிக்கு பெயரை பதிவு செய்து கொள்ள, ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 4 வரை அவகாசம் அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்போர், மைசூரை பற்றியும், தங்களுக்கு விருப்பமான சுற்றுலா தலம் குறித்தும் எழுத வேண்டும். ஆர்வம் உள்ளோர் பெயரை, பதிவு செய்து கொள்ளலாம்.
பெயரை பதிவு செய்து கொள்ள, கூடுதல் தகவல் பெற competitions@karnatakatourism,orghttps://karnatakatourism.org/whats-new/competitions ல் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement