அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்..! தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா – வீடியோ

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது. ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று விமானம் மூலம் அயர்லாந்து புறப்பட்டு சென்றனர்.

இந்தியா-அயர்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் டப்ளினில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள பும்ரா இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின் போது பும்ரா வீசிய பந்தை இந்திய அணியின் இளம் வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.