சென்னை: விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமான நிலையில், கோலிவுட்டின் யங் ஹீரோவாக தற்போது கலக்கி வருகிறார். லாஸ்லியாவுடன் பிரேக்கப் ஆன நிலையில், மோனிகா என்பவரை காதலிக்க ஆரம்பித்த நடிகர் கவின் இன்று அவரை சொகுசு ரெசார்ட் ஒன்றில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
