விஜய், அஜித் கிடையாது.. அடுத்த சூப்பர் இவர் தான்: வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சைகள் இப்போதைக்கு ஓயாது போல. கடந்த 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கோலேச்சி வருபவர் ரஜினிகாந்த். ஏறக்குறைய பல தலைமுறைகளுக்கு சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து சமீப காலமாக சோஷியல் மீடியாவில் வெடித்து வருகிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி உலகமெங்கும் செம்மையாக ஹிட்டடித்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ‘ஜெயிலர்’ வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இந்தப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்தப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தை வேறலெவலில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது.

Rajinikanth: சூப்பர் ஸ்டார் சர்ச்சை.. ரஜினியிடம் பேசினேன்: சரத்குமார்.!

இதனிடையில் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல்கள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் அதிகரித்து வருகின்றன. ஒருப்பக்கம் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என தளபதி ரசிகர்கள் கூற, ரஜினி மட்டும் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையில் அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களும் ஒருப்பக்கம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ‘மஞ்சள் வீரன்’ இயக்குனர் அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், ‘அடுத்த சூப்பர் ஸ்டாராக வரக்கூடிய அனைத்து திறமைகளும் சந்தேகமே இல்லாமல் டிடிஎஃப் வாசனுக்கு உள்ளது. அவர் கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார். எழுதி வைத்து கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த சோதனை என கூறி வருகின்றனர்.

யூடிப்பர் மற்றும் பைக்கரான டிடிஎஃப் வாசன் முதன்முறையாக ஹீரோவாக களமிறங்கவுள்ளார். ‘மஞ்சள் வீரன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை செல் ஆம் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கியவர். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vijay: ரஜினி பற்றி விஜய் சொன்ன ‘ஒத்த’ வார்த்தை: முடிவுக்கு வரும் மோதல்.?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.